

ரஷியாவின் இரண்டாவது மிகப் பெரிய மற்றும் முக்கிய எண்ணெய் மையத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் நோவோரோசிஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் முக்கிய எண்ணெய் மையத்தின் மீது நேற்று (நவ. 14) நள்ளிரவு உக்ரைன் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், அங்குள்ள எண்ணெய் கிடங்குகள், எண்ணெய் விநியோகிக்கும் மிகப் பெரிய குழாய்கள் ஆகியவை சேதமாக்கப்பட்டு, அந்த எண்ணெய் மையம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
இத்துடன், ரஷியாவின் எஸ் - 400 வான்பாதுகாப்பு ஏவுதளத்தின் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நெப்டியூன் மற்றும் ஃபிளாமிங்கோ ஏவுகணைகள் மூலம் ரஷியாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் ரஷியாவின் எந்தப் பகுதியின் மீது நடத்தப்பட்டன எனும் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ரஷியாவின் போருக்கு உதவும் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாக, உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது நேற்று அதிகாலை ரஷியா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர ஏவுகணை - ட்ரோன் தாக்குதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.