

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம் என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவா்கள் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, அப்போது பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் நேற்று (நவ. 17) தீா்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டுமென, வங்கதேசத்தின் இடைக்கால அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை வங்கதேசத்தின் உள்நாட்டு விவகராம் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“வங்கதேச மக்கள் அனைவரிடமும் நல்ல அண்டை நாடு மற்றும் நட்புறவு கொள்கையை சீனா கடைப்பிடிக்கின்றது. வங்கதேசம் விரைவில் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை அடையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.