

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பாய்லர் வெடித்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து துணை ஆணையர் ராஜா ஜஹாங்கிர் அன்வர் கூறுகையில், பாய்லர் வெடித்ததில் அருகிலிருந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
இதுவரை, மீட்புக் குழுக்கள் இடிபாடுகளில் இருந்து 15 உடல்களை மீட்டுள்ளனர். காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புக் குழுக்கள் இடிபாடுகளை அகற்றுவதில் மும்முரமாக உள்ளன. முழு மாவட்ட நிர்வாகமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன என்றார்.
பஞ்சாப் காவல் துறைத் தலைவர் உஸ்மான் அன்வர் வெளியிட்ட அறிக்கையில், மீட்பு 1122, தீயணைப்புப் படை மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் முழு ஆதரவை வழங்குமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே பாய்லர் வெடித்ததில் பலியானோரின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் மர்யம் நவாஸ் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என பைசலாபாத் ஆணையரிடம் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.