இந்தோனேசியா வெள்ளம்
இந்தோனேசியா வெள்ளம் AP

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு; 100 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 248 பேர் பலியானது குறித்து...
Published on

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால், அங்குள்ள ஏராளமான மாகாணங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேரிடரில், அந்த மாகாணங்களின் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து பாதைகளும் முடங்கியுள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு சுமத்ரா மாகாணத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதன்மூலம், இந்தப் பேரிடரில், பலியானவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 100-க்கும் அதிகமான மக்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சுமத்ராவில் தொடர்ந்து பெய்த கனமழையால், வடக்கு சுமத்ராவில் உள்ள ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்துடன், சுமத்ரா தீவின் ஆச்சே மாகாணத்தில் கடந்த நவ.27 ஆம் தேதி காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!

Summary

The death toll from floods and landslides in Indonesia has risen to 248.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com