
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதினின் வருகைக்கு முன்பாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ இந்தியாவிற்கு வருகைப் புரிந்து, இருதரப்பு சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவையின் 80வது அமர்வில் பேசிய லாவ்ரோ, ரஷிய அதிபர் புதின், டிசம்பரில் புதுதில்லிக்குச் செல்லவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாகப் பேசிய அவர், வணிகம், ராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செய்யறிவு தொழில்நுட்பம், மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் எனக் கூறினார்.
வணிகத்தைப் பொருத்தவரை யாரையும் சார்ந்திருக்காமல் தனிச்சையாக முடிவுகளை எடுக்கக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளதாகவும், நாட்டின் தேசிய நலன்கள் குறித்து சர்வதேச அளவில் தொடர்ந்து மோடி பேசி வருவதால், இந்தியா உடனான உயர்மட்டத் தொடர்பை எப்போதுமே ரஷியா விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளார். வணிகம், பாதுகாப்பு என இருதரப்பு நலன்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்.
ரஷியாவில் தொடர்ந்து எண்ணெய்க் கொள்முதல் செய்து வருவதன் காரணமாக இந்தியா மீது கூடுதலாக 25% என மொத்தம் 50% வரிகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் நெருக்கமடைந்து வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.