அஜர்பைஜான் விமான விபத்து: ரஷிய பாதுகாப்பு அமைப்புதான் காரணம்! - அதிபர் புதின்!
அஜர்பைஜான் விமான விபத்துக்கு, ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம், என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ரஷியாவின் க்ரோஸ்னி நகரத்துக்கு 67 பயணிகளுடன் புறப்பட்டது.
அப்போது, திடீரென அந்த விமானம், கசகஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, விபத்துக்குள்ளானதில் 38 பயணிகள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலீவ் உடனான சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதையும் படிக்க: இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!
Russian President Vladimir Putin has for the first time taken responsibility for the Azerbaijan plane crash, blaming Russia's air defense systems.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.