
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர்.
ஆஃப்கானிஸ்தானின் தலிபான் படைகள், பாகிஸ்தான் ராணுவம் தங்கள் நாட்டின் மீது விமானத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து, ஆயுதத்துடன் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டன.
காபூலில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தலிபான் படைகள், ’பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுடன் கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளன’ என்று ஆஃப்கான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானத்தை ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
தலிபான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ”எதிர்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறினால், எங்கள் ஆயுதப் படைகள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கத் தயாராக உள்ளன, திரும்பவும் பதிலடி கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.