ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி கூறினாரா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்!

ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் விளக்க்கம்...
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AFP
Published on
Updated on
1 min read

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், “ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் இன்று உறுதி அளித்தார், இது ரஷியாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தின் மிகப்பெரிய முன்னேற்றம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தெரிவித்திருப்பதாவது:

”கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நமது இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தை கொண்டு முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.

நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை நமது கொள்கையின் இரட்டை இலக்காக இருக்கின்றன. இதில், சந்தை நிபந்தனைகளைப் பொறுத்து நமது ஆற்றல் ஆதாரங்களை விரிவுப்படுத்துதல் மற்றும் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்துதல் அடங்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். இது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருகின்றன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தப் போவதாக டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

”டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார். ரஷியாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்.” என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.

Summary

Did Modi say he would stop buying Russian oil? Ministry of External Affairs clarifies!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com