ரஷிய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா! மோடியுடன் பேசிய டிரம்ப் தகவல்!

மோடியை தொடர்புகொண்டு டிரம்ப் பேசியது பற்றி...
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AFP
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த மோடி விரும்புவதாகவும், ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், மோடியுடன் தொலைபேசியில் பேசியது குறித்து தெரிவித்ததாவது:

“இந்திய மக்களை நான் நேசிக்கிறேன். நம் நாடுகளுக்கு இடையே சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இன்று நான் பிரதமர் மோடியுடன் பேசினேன், எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. அவர் ரஷியாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்கப் போவதில்லை. நான் விரும்புவது போல், ரஷியா - உக்ரைன் போர் முடிவடைவதைக் காண அவரும் விரும்புகிறார்.

ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிகமாக எண்ணெய் வாங்கப் போவதில்லை. எண்ணெய் கொள்முதலை அவர்கள் வெகுவாகக் குறைத்துள்ளனர், மேலும் தொடர்ந்து அதைக் குறைத்து வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்புடன் பேசியதை உறுதிசெய்துள்ள மோடி, சமூக ஊடகத்தில் தெரிவித்திருப்பதாவது:

”தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இந்த தீப ஒளித் திருநாளில், நமது இரண்டு பெரும் ஜனநாயக நாடுகளும் உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்து, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக நிற்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

India has reduced its purchase of Russian oil! Trump reportedly spoke to Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com