
ரூ. 45 லட்சம் பணம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளைஞர், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர் அமெரிக்காவில் பாதுகாவலர் பணியில் இருந்தபோது பொது இடத்தில் சிறுநீர் கழித்த ஒருவரை எதிர்த்ததற்காக சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட 26 வயது இளைஞர் கபில், ஹரியாணா மாநிலம் ஜிந்த் மாவட்டம் பரா கலன் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு 'டாங்கி ரூட்' வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து பாதுகாப்பு காவலராகப் பணியாற்றி வந்தார்.
அவர் பணியில் இருந்த வளாகத்தில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். அதனை எதிர்த்து கேட்ட கபிலை, அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில், கபில் அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
கபில் குடும்பத்தினர் வசிக்கும் கிராமத்தின் தலைவர் இதுபற்றி கூறுகையில், 'கபில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பெற்றோருக்கு ஒரே மகன். ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்றார். முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.
அமெரிக்காவில் உள்ள உறவினர் மூலமாக அவர் இறந்த தகவல் அறிந்தோம். கபிலுக்கு இரண்டு சகோதரிகள். ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
எங்கள் கிராமத்தினர் அனைவரும் அவருடன் இருக்கிறோம். கபிலின் குடும்பத்தினர் மனதளவில் மிகவும் உடைந்துள்ளனர். கபிலின் உடலை இந்தியா கொண்டு வர அரசு உதவ வேண்டும். துணை ஆணையரிடம் இதுகுறித்து மனு அளிக்க நேரம் கேட்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.