விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?

காதலனை விவாகரத்து செய்ய மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண் தொழிலதிபரைப் பற்றி..
extramarital affair be detected in a horoscope?
திருமணம்file photo
Published on
Updated on
2 min read

தன்னுடைய காதலனை விவாகரத்து செய்ய அவரது மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண், தன்னுடைய கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், ஓராண்டு சேர்ந்து வாழ்ந்தபிறகு, காதலனைப் பிடிக்கவில்லை என்றுகூறி, முன்னாள் மனைவியிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.

சீனாவில் நடந்த இந்த விநோதமான காதல் கதை இன்று தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. காரணம் அந்த கதையில் நடந்த திருப்புமுனைதான். இன்று சீனாவில் பரபரப்பாகப் பேசப்படும் செய்திகளில் இதுவும் ஒன்றாக மாறியிருக்கிறது.

அது மட்டுமா, காதல், திருமணம், பணம், தொழில், நட்பு என பல தலைப்புகளில் இது விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

சீனாவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பவர் ஸுஹு என்ற பெண், இவர் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் இளம் வயது ஊழியர் மீது காதல் வயப்பட்டார். ஆனால், இவருக்குமே திருமணமாகியிருந்தது. காதலுக்காக, தன்னுடைய கணவரைப் பிரியவும் முடிவு செய்தார்.

ஆனால், காதலனின் மனைவியை எப்படி விவாகரத்து செய்ய வைப்பது. அதற்காக ஸுஹு, காதலனின் மனைவிக்கு ரூ.3.7 கோடியை (மூன்று மில்லியன் யுவான் ) ஜீவனாம்சமாகவும், அவர்களது குழந்தையின் பராமரிப்புச் செலவுக்காகவும் கொடுத்துள்ளார். பிறகு, காதலனுக்கு விவாகரத்துக் கிடைத்திருக்கிறது.

பிறகு, காதலனை கரம்பிடித்தார் தொழிலதிபர் ஸுஹு. ஓராண்டு காதலனுடன் வாழ்ந்தபிறகுதான், அவருக்கு ஒன்று புலப்பட்டது. இவரும் சரியான இணையர் அல்ல என்பது. உடனே செய்த தவறை உணர்ந்த ஸுஹு, தான் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த சோங்குவிங் நீதிமன்றம், ஸுஹு பணத்தை திரும்ப அவரிடமே கொடுக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, பணத்தை வாங்கிய சென் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னுக்கு நேரடியாக ஸுஹு பணத்தை பரிசாக அளித்ததை அவரால் நிரூபிக்க முடியாமல் போனதை சுட்டிக்காட்டியது.

மேலும், விவாகரத்துக்கான இழப்பீடாகவே அந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது குழந்தையை வளர்க்கவும் அந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஸுஹுவின் நடத்தையை கடுமையாகக் கண்டித்திருக்கும் நீதிமன்றம், தன்னுடைய பணத்தை வைத்து, ஒரு குடும்பத்தைப் பிரித்து விவாகரத்துப் பெற வைத்து, தற்போது மீண்டும் தன்னுடைய பணத்தைக் கேட்கிறார். இது முழுக்க முழுக்க ஏற்புடைய நடத்தை அல்ல என்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

முந்தைய தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி, பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டார்.

தற்போது பணத்தை இழந்ததோடு, தன்னுடைய நடத்தைக்காக சமூக வலைத்தளங்களில் ஸுஹு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஒருவருடைய திருமண வாழ்க்கையை கெடுத்துவிட்டு, அதற்கு பணம் கொடுக்கிறேன் என்று கொடுத்து, இப்போது அதையும் திரும்பக் கேட்பது நியாயமில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இனி, அழகான ஆண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள், அப்போதுதான், இப்படி பணக்காரராக முடியும் என்று எதிர்மறையான கருத்துகளும் வருகின்றன. முதல் முறையாக, அலுவலக ஊழியரின் விவாகரத்துக்கு ரூ.3.7 கோடியை முதலாளி செலவிட்டது இதுவே முதல்முறையாக இருக்கும் என்றும் பலரும் கருத்துகளை பதிவிடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com