இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பாகிஸ்தானுக்கு 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவிக்கரம்

பாகிஸ்தானுக்கு 500 கோடி டாலர் வழங்கி உதவும் சௌதி அரேபியா, கத்தார்

News image

பாகிஸ்தான் சௌதி தலைவர்கள் பேச்சுவார்த்தை - IANS

Updated On :12 ஏப்ரல் 2026, 6:25 pm IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு 500 கோடி டாலர் வழங்கி சௌதி அரேபியாவும் கத்தாரும் உதவிக்கரம் நீட்டப்போவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து பாகிஸ்தான் வாங்கியிருந்த கடன் தொகையில், 350 கோடி டாலர் தொகையை இம்மாதம் திருப்பியளிக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ள பாகிஸ்தான் அரசுக்கு சௌதி அரேபியாவும் கத்தாரும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இது தொடர்பாக, சௌதி நிதியமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜதான் இஸ்லாமாபாத்துக்கு வருகை தந்திருந்தபோது, பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப்பும் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப்பும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததும், அப்போது, பாகிஸ்தானுக்கு சௌதி தொடர் ஆதரவு அளிக்குமென உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் இவ்விவகாரம் குறித்து பதிவிட்ட டான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Summary

Cash-strapped Pakistan is set to receive USD 5 billion in financial support from Saudi Arabia and Qatar, providing a critical buffer for its fragile external position, according to a media report on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.