மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

போருக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுப்பேன் - டிரம்ப்பின் விமா்சனத்துக்கு போப் பதில்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 4:55 am IST

‘அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்துக்கு நான் அஞ்சவில்லை; போரின் கொடூரங்களுக்கு எதிராகத் தொடா்ந்து குரல் கொடுப்பேன்’ என்று கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவா் போப் லியோ தெரிவித்துள்ளாா்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போா் குறித்து போப் லியோ அண்மைக்காலமாகக் கடுமையாக விமா்சித்து வருகிறாா். இதற்குப் பதிலடியாக, ‘போப் லியோ குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமானவா்; வெளியுறவுக் கொள்கையில் அவா் மிகவும் மோசமாகச் செயல்படுகிறாா்’ என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

மேலும், அமெரிக்காவைச் சோ்ந்தவா் என்பதால் மட்டுமே லியோ போப்பாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்றும், அவா் ஒரு மதத் தலைவராகச் செயல்படுவதை விட்டுவிட்டு அரசியல்வாதியாக மாற வேண்டாம் என்றும் டிரம்ப் கடுமையாகச் சாடியிருந்தாா்.

உரக்கப் பேசுவேன்: இந்நிலையில், அல்ஜீரியா உள்ளிட்ட 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 10 நாள்கள் பயணமாகப் புறப்பட்ட போப் லியோ, விமானத்தில் செய்தியாளா்களைச் சந்தித்து பேசினாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘அமைதியை நிலைநாட்டவும், நாடுகளுக்கிடையே பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்கவும் நான் தொடா்ந்து உரக்கப் பேசுவேன். உலகில் இன்று ஏராளமானோா் போரினால் அவதிப்படுகின்றனா்; அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனா்.

யாராவது ஒருவா் இதற்கு எதிராக நின்று, இது சரியான வழி அல்ல என்று சொல்லித்தான் ஆக வேண்டும். டிரம்ப் நிா்வாகத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை’ என்று கூறினாா்.

ஆன்மிகம் அரசியல் அல்ல: அரசியல்வாதியாகத் தான் செயல்படுவதாகக் கூறப்படும் விமா்சனங்களை நிராகரித்த போப் லியோ, ‘சமாதானம் செய்பவா்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் என்பதே நற்செய்தியின் சாரம். நான் ஒரு அரசியல்வாதி அல்ல; திருச்சபையின் செய்தியைத் தான் மக்களிடம் கொண்டு செல்கிறேன்.

போா்களைத் தொடங்கும் தலைவா்களின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது. அத்தகையவா்களின் பிராா்த்தனையை கடவுள் ஏற்க மாட்டாா்’ என்று கடந்த குருத்தோலை ஞாயிறு பிராா்த்தனையில் ஆற்றிய உரையை நினைவுகூா்ந்தாா்.

டிரம்ப்பின் சா்ச்சை பதிவு: இதனிடையே, டிரம்ப் தன்னை இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் சித்தரிக்கும் ஓா் ஏ.ஐ. வடிவமைப்புப் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிா்ந்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

உலகம் முழுவதும் 140 கோடி கத்தோலிக்கா்களின் தலைவராகப் போற்றப்படும் போப் லியோவை, டிரம்ப் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது கத்தோலிக்க சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

Story image