‘உலக நாடுகள் போருக்காக கோடிக்கணக்கான டாலா்களை வாரி இறைக்கிறது; ஒருசில சா்வாதிகாரிகளின் பிடியில் சிக்கி இந்த உலகம் சீரழிந்து வருகிறது’ என போப் லியோ கவலை தெரிவித்தாா்.
ஆப்பிரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக கேமரூன் நாட்டின் பமெண்டா நகர விமான நிலையத்தில் சுமாா் 20,000 போ் பங்கேற்ற திருப்பலியில் அவா் பேசியாதவது:
ஆக்கபூா்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை அழிவுப்பாதைக்குத் திருப்புவது கண்டிக்கத்தக்கது. அழிப்பது என்பது ஒரு நொடிப் பொழுது வேலை. ஆனால் அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வாழ்நாள் போதாது என்பதைப் போா் வெறி கொண்ட ஆட்சியாளா்கள் உணர மறுக்கின்றனா்.
சுகாதாரம், கல்வி, மறுவாழ்வு போன்ற அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் தலைவா்கள், போருக்காக மட்டும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவிடுவது உலகைப் பின்னோக்கித் தள்ளும் செயல். இத்தகைய போரை நியாயப்படுத்த மதத்தைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று எச்சரித்தாா்.
ஈரான் போா் விவகாரத்தில் அமைதியை வலியுறுத்திய போப் லியோவை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் விமா்சித்த நிலையில், அதற்கு மறைமுகமாகப் பதிலடி கொடுக்கும் வகையில் போப் லியோவின் இப்பேச்சு அமைந்துள்ளது.
கேமரூனில் நிலவி வரும் உள்நாட்டு மோதல்கள் குறித்துப் பேசிய போப், ஊழலை ஒழிக்கவும், அதிகார வா்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகச் செயல்படவும் அந்நாட்டு அரசுக்கு அறிவுறுத்தினாா்.
போப் வருகையை முன்னிட்டுப் போராளி குழுக்கள் 3 நாள் போா்நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவா்களின் மத்தியஸ்தம் மூலம் இப்பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போருக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுப்பேன் - டிரம்ப்பின் விமா்சனத்துக்கு போப் பதில்

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!

ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

