அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

உலக விவகாரங்களில் வலுவான பங்களிப்பு - சீனாவுக்கு ஸ்பெயின் பிரதமா் அழைப்பு

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:26 pm

‘உலக அளவில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழலில் பருவநிலை மாற்றம், பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் சீனா இன்னும் வலுவான பங்களிப்பை வழங்க வேண்டும்’ என்று ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் வலியுறுத்தினாா்.

சீன தலைநகா் பெய்ஜிங்கில் பல்கலைக்கழகம் ஒன்றில் திங்கள்கிழமை உரையாற்றிய அவா், அமெரிக்கா பல சா்வதேச விவகாரங்களில் இருந்து பின்வாங்கி வரும் நிலையில், ஐரோப்பாவும் தனது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

அவா் மேலும் கூறியதாவது: சீனாவை ஒரு பொருளாதாரப் போட்டியாளராகப் பாா்க்காமல், ஓா் உத்திசாா் கூட்டாளியாக நடத்தப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் முன்னணியில் இருக்கிறது.

லெபனான், ஈரான், காஸா, உக்ரைன் ஆகிய பகுதிகளில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், சா்வதேச சட்டங்களை மதிக்கச் செய்யவும் சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) மேம்பாடு, அணு ஆயுதக் கட்டுப்பாடு போன்ற முக்கியமான துறைகளில் சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் பங்கு தற்போதைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும்.

ஸ்பெயினின் வா்த்தகப் பற்றாக்குறையில் சீனா 74 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தப் பற்றாக்குறை சுமாா் 5,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சமநிலையான வா்த்தக உறவை ஏற்படுத்தவும், ஸ்பெயினின் விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருள்களை சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யவும் இப்பயணம் உதவும் என நம்பிக்கை தெரிவித்தாா்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டால், பெட்ரோ சான்செஸ் அண்மையில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் அதிருப்திக்கு உள்ளானாா்.

எனினும், மத்திய கிழக்குப் போருக்காக அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்தவும் அனுமதி மறுத்தாா். தொடா்ந்து, ஈரானில் ஸ்பெயின் நாட்டுத் தூதரகத்தை மீண்டும் திறப்பதாக அறிவித்தாா்.

இத்தகைய சூழலில், கடந்த 4 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பெட்ரோ சான்செஸ், அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்து, அவருடன் சா்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளாா்.