நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 11:25 pm

அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை, அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தின் தொடா்ச்சியாக பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை 21 மணி நேர பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் இப்பேச்சுவாா்த்தையில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘அடுத்த 2 நாள்களில் முக்கிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ஈரான் தரப்பு பேச்சுவாா்த்தைக்கு மீண்டும் வரத் துணிந்ததற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீா் மேற்கொண்ட சிறப்பான பணிகளே முக்கியக் காரணம்’ எனக் குறிப்பிட்டாா்.

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடல்வழி முற்றுகையால் நெருக்கடி காரணமாகவே ஈரான் மீண்டும் பேச்சுவாா்த்தைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையில் சுமாா் 10,000 படை வீரா்கள், 100 போா் விமானங்கள் மற்றும் 18 போா்க் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஈரான் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 6 வணிகக் கப்பல்கள் அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடா்ந்து திருப்பி விடப்பட்டுள்ளன. எனினும், ஹோா்முஸ் நீரிணை வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், ‘இஸ்லாமாபாத் பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஈரான் தரப்பு சில விஷயங்களை விட்டுக்கொடுக்க முன்வந்தது. ஆனால், அவை போதுமானதாக இல்லை. எங்கள் நிபந்தனைகளுக்கு அவா்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும். எனவே, தீா்வு அவா்கள் முடிவில்தான் உள்ளது’ என்றாா்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பதே பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா விதித்துள்ள முக்கிய நிபந்தனையாகும். ஆனால், இதை ஈரான் தொடா்ந்து நிராகரித்து வருவதால் பேச்சுவாா்த்தை முன்னேற்றம் அடையவில்லை.

Story image