இந்தோனேசியாவில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் வேகமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிகை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது நீண்ட தூர அதிவேக ரயில் ஒன்று வேகமாக பின்பக்கம் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 14 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜகார்த்தாவில் உள்ள பெகாசி நகர ரயில் நிலையத்தில் ஜகார்த்தா முதல் சிகரங் வரை செல்லும் பயணிகள் ரயில் மீது ஜகார்த்தா - சுரபாயா இடையே ஓடும் இந்தோனேசியாவின் அதிவேக ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. 100-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் போக்குவரத்து விபத்துகள் வழக்கமாக நடைபெறுவதே. அங்கு பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்பட பழையதாகவும் முறையான பராமரிப்பற்றதாகவும் உள்ளன.
இதற்கு முன்னர், மேற்கு ஜாவா பகுதியில் 2024-ல் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 பேர் பலியாகி 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Summary
Train Accident in Indonesia! Death Toll Rises to 14!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

தில்லியில் 3 பேர் பலியான துக்ளகாபாத் குடியிருப்பு தீ விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நெல்லை அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி
தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி; மேலும் சிலர் கவலைக்கிடம்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



