நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

150 ஆண்டுகளுக்குப் பிறகு... புத்தகத்தைத் திருப்பித் தராததால் ரூ. 18 லட்சம் அபராதம்

ஆஸ்திரேலியாவில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட புத்தகத்துக்கு ரூ. 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து...

News image

நூலகம் - பிரதிப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 4:16 pm IST

ஆஸ்திரேலியாவில் பொது நூலகத்தில் 150 ஆண்டுகளாகத் திருப்பித் தராத புத்தகத்துக்காக ரூ. 16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் 1858-ல் வெளியிடப்பட்ட ஏதென்ஸின் தொல்பொருள்கள் என்ற கிரேக்க தொல்பொருள்களைப் பற்றிய புத்தகத்தை 1872-ல் ஒருவர் படிப்பதற்காக இரவலாக கியாமா என்ற நூலகம் கொடுத்துள்ளது.. ஆனால், புத்தகத்தைத் திருப்பித் தரப்படாமலே இருந்துள்ளது.

இந்த நிலையில், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை நூலகத்தில் ராஸ் சிம்மன்ஸ் என்பவர் ஒப்படைத்துள்ளார். வீட்டின் புனரமைப்புப் பணியின்போது கிடைத்த இந்தப் புத்தகத்தை தன்னுடைய தாத்தாவின் தந்தை (கொள்ளு தாத்தா) வாங்கியிருக்கலாம் என்று சிம்மன்ஸ் கூறுகிறார். இந்தப் புத்தகத்தை கடைசியாக யார் வாங்கினார்கள் என்ற பதிவேடுகள் தங்களிடம் இல்லை என நூலகத்தின் தரப்பில் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, புத்தகத்தை இத்தனை ஆண்டுகளாக (150 ஆண்டுகள்) திருப்பித் தராமல் இருந்ததாக 28,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (ரூ. 18.7 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டது.

புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்தவாறு, தாமதமாக அளிக்கப்பட்டால் வாரத்துக்கு 3 பென்ஸ் என்ற பிரிட்டிஷ் கட்டணமும், நூலகத்தின் விதிகளின்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

Summary

Book borrowed 150 years ago returns to Australian library, fine tops Rs 18.7 lakh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.