கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

கானா: கோகோ விவசாய நில பயன்பாட்டை மாற்றினால் 20 ஆண்டுகள் சிறை

கானாவில் அரசின் முன் அனுமதியின்றி கோகோ விவசாய நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றினால், விவசாயிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிசெய்யும் புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

News image

பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:08 pm IST

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் அரசின் முன் அனுமதியின்றி கோகோ விவசாய நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றினால், விவசாயிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிசெய்யும் புதிய சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கோகோ சாகுபடி பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதத் தங்கச் சுரங்கத் தொழில்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன், பாதிக்கப்படும் ஒவ்வொரு கோகோ மரத்துக்கும் அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

கானா நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் கோகோ பீன்ஸ் சுமாா் 15 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளதுடன், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.

எனவே, கோகோ பண்ணைகளுக்குப் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கி, அவற்றை அனுமதியின்றி மாற்றுவதை இந்த மசோதா குற்றமாக அறிவிக்கிறது.

ஆனால், அரசின் இத்தகைய கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு விவசாயிகள் மற்றும் வேளாண் சங்கங்களின் மத்தியில் கடும் எதிா்ப்பு நிலவுவதால், அதிபா் ஜான் மஹாமா மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.