கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இந்தியா உள்பட 58 நாடுகள் மீதான புதிய வரிகள்: டிரம்ப் அரசுக்கு எதிராக 28 மாகாணங்கள் வழக்குப்பதிவு!

58 நாடுகள் மீது புதிய வரிகளை விதித்த டிரம்ப் அரசுக்கு எதிராக 28 மாகாணங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published On :

58 நாடுகள் மீது புதிய வரிகளை விதித்த டிரம்ப் அரசுக்கு எதிராக 28 மாகாணங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தால் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்ட இறக்குமதி வரிகளுக்குப் பதிலாக, புதிய வரிகளை விதித்துள்ள ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது அமெரிக்காவின் 25 மாகாணங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் உள்பட 59 நாடுகள் மீது அமெரிக்க கடந்த மாதம் 10% மேல் வரிகளை விதித்திருந்தது. முன்னர் விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதற்கான காலாவதி நேரம் முடிந்ததும் புதிய வரிகள் நடைமுறைக்கு வந்தன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 மாகாணங்கள் சார்பில் டிரம்ப் அரசு மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு சட்டவிரோதமாக வரிகளை உயர்த்துவதாக நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நியூயார்க்குடன் இணைந்து அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், கென்டக்கி, மாசசூசெட்ஸ், மேரிலாந்து, மெய்ன், மிச்சிகன், மினசோட்டா, நெவாடா, நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, வட கரோலினா, ஓரிகான், பென்சில்வேனியா, ரோட் ஐலேண்ட், வர்ஜீனியா, வெர்மான்ட், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்கள் இணைந்து வழக்குத் தொடர்ந்துள்ளன.

அமெரிக்க உற்பத்தித் துறையை அதிக வரிகள் மீட்டெடுக்கும் என்று கூறும் ட்ரம்ப், குறைந்த வரிகள் மூலம் தடையற்ற வர்த்தகத்தை ஆதரிக்கும் பல்லாண்டு அமெரிக்கக் கொள்கையை கடந்த ஆண்டு மாற்றியமைத்தார்.

அமெரிக்காவின் நீண்டகால வர்த்தகப் பற்றாக்குறை ஒரு தேசிய அவசரநிலைக்குச் சமமானது என்று கூறி, 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் இறக்குமதிகள் மீதும் இரண்டு இலக்க சதவீதத்தில் வரிகளை விதித்தார். ஆனால், குறிப்பிட்ட சட்டம் வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் வரிகளைச் செலுத்திய நாடுகளுக்கு அதனைத் திரும்பச் செலுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இழந்த வருவாயை ஈடுசெய்யும் விதமாக, உலக நாடுகள் மீது 10% தற்காலிக வரிகளை விதித்தார் டிரம்ப். ஆனால் அவை ஜூலை 24 முதல் காலாவதியாகின

இந்த நிலையில், 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் மிகவும் நிலையான வரிகளை டிரம்ப் அமல்படுத்தி வருகிறார். நியாயமற்ற வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக இறக்குமதி வரிகள் மற்றும் பிற தடைகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், சீன இறக்குமதிகள் மீது வரிகளை விதிக்க இந்தப் பிரிவைப் பயன்படுத்தினார். அந்த நடவடிக்கை சட்டரீதியான சவால்களைத் தாண்டியும் நிலைத்து நின்றது.

Summary

New tariffs on 58 countries, including India: 28 states file lawsuit against the Trump administration!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.