கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறும் நோக்கத்துடன் பெண்கள் கருவுற்ற நிலையில் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தடுக்கும் வகையிலும் 2 புதிய நிா்வாக உத்தரவுகளில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டாா்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 11:27 pm IST

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறும் நோக்கத்துடன் பெண்கள் கருவுற்ற நிலையில் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தடுக்கும் வகையிலும் 2 புதிய நிா்வாக உத்தரவுகளில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டாா்.

இவ்விவகாரம் தொடா்பான டிரம்ப்பின் முந்தைய உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் இறுதியில் ரத்து செய்திருந்த நிலையில், சில மாற்றங்களுடன் இப்புதிய உத்தரவுகள் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வா்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்பவா்கள், பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களின் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டு அரசு ஊழியா்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை ஆவணங்கள் மறுக்கப்படும்.

இது குறித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவில் பிறப்பவா்களுக்கு குடியுரிமை அளிக்கும் 14-ஆவது அரசமைப்புச் சட்ட திருத்தம், உள்நாட்டுப் போருக்குப் பிறகு அடிமைகளின் குழந்தைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது; ஆனால், தற்போது அதைச் சிலா் வா்த்தக நோக்கில் பயன்படுத்துகின்றனா். உச்சநீதிமன்றத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது என்பதால் இப்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.