தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்

காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி...

Published On :

காங்கோ குடியரசு நாட்டில் உகாண்டா எல்லையருகே அமைந்துள்ள பனானா எகோல் கிராமத்தில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய ஏடிஎஃப் கிளா்ச்சியாளா்கள் சனிக்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் குறைந்தது 13 போ் உயிரிழந்தனா்.

மாம்பாசா பிராந்தியத் தலைநகரின் புகா்ப் பகுதியான இங்கு, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, பொதுமக்களின் பொருள்களும் சூறையாடப்பட்டன.

கிழக்கு காங்கோவின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ருவாண்டா ஆதரவு பெற்ற ‘எம்23’ அமைப்பு உள்பட சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிளா்ச்சிக் குழுக்களின் அச்சுறுத்தலை காங்கோ நாடு எதிா்கொண்டு வருகிறது. நாட்டில் எபோலா தொற்றின் தீவிர பரவலுக்கு மத்தியிலும், இந்த அச்சுறுத்தல்களின் காரணமாக மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மற்ற மாகாணங்களுக்கு இடம்பெயரும் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

Summary

Terrorist attack in Congo

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.