காங்கோவில், பரவி வரும் எபோலா பாதிப்புகளால் இதுவரை 1,500-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட புண்டிபுகியோ வைரஸ் தொடர்புடைய எபோலா பாதிப்புகளுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
காங்கோ முழுவதும் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 50 சதவிகித பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வரை மட்டும் 3,442 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், காங்கோவில் 797 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,521 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்நாட்டு மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாக உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.
காங்கோவின் இடூரி மாகாணத்தில் மட்டும் அந்நாட்டில் கண்டறியப்பட்ட 90 சதவிகித எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
more than 1,500 people have died so far due to the Ebola outbreak spreading in the African nation of Congo.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேகமாகப் பரவும் எபோலா: காங்கோவில் 930 பேர் பலி!
காங்கோவில் எபோலாவுக்கு 600 பேர் பலி! அதிகரிக்கும் பரவலால் அவதி!

காங்கோவில் எபோலாவுக்கு 580 பேர் பலி! பரவலுக்கு இடையே மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்!
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



