ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

காங்கோவில் எபோலா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது குறித்து...

Ebola death toll

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் பலியானவரின் இறுதிச்சடங்கில் நிகழ்வில் அழும் உறவினர்கள் - கோப்புப் படம் | AP

Published On :18 ஜூன் 2026, 10:07 pm IST

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றின் பரவலால் 200-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், எபோலா தொற்றின் புதிய பரவல் தொடங்கியது முதல் காங்கோ நாட்டில் மட்டும் 202 பேர் பலியானதாகவும், 875 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவின் இடூரி, வடக்கு கிவூ மற்றும் தெற்கு கிவூ ஆகிய மாகாணங்களில் எபோலா தொற்றின் பாதிப்புகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்நாட்டில் எபோலா பரவலின் இறப்பு விகிதம் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

காங்கோவின் சில பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால், காங்கோவில் எபோலா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஓராண்டு காலம் ஆகும் என செஞ்சிலுவை இயக்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

more than 200 people have died due to the spread of the Ebola virus in the African country of Congo.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.