9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

காங்கோவில் எபோலாவுக்கு 580 பேர் பலி! பரவலுக்கு இடையே மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

காங்கோவில் மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து...

News image
Updated On :8 ஜூலை 2026, 4:29 pm IST

காங்கோவில் எபோலா பரவலுக்கு இடையே மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ, உகாண்டா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில மாதங்களாக எபோலா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அந்நாடுகளின் அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

காங்கோ நாட்டில் மட்டும் 580 பேர் எபோலா தொற்றால் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு எபோலாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,708 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், முறையாக ஊதியம் வழங்காதது மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்துக் கொடுக்காததைக் கண்டித்து சூடானில் நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், பெருந்தொற்று அறிவிக்கப்பட்ட கடந்த மே 15 ஆம் தேதி முதல் எபோலா பாதிப்புகள் அதிகம் பதிவாகியுள்ள இடூரி மாகாணத்தில், மருத்துவப் பணியாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஏற்கெனவே, எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் காங்கோவில் உள்ள மருத்துவ மையங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளது அங்கு நிலமையை மேலும் மோசமாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Summary

that medical workers in Congo are on strike amidst the Ebola outbreak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.