செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

ஜொ்மனியில் தொடரும் ட்ரோன் அத்துமீறல்கள்

மெக்கொ்னிச் ராணுவ முகாமின் மீது சந்தேகத்துக்கு இடமான 2 ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிபொருள்களுடன் கூடிய ட்ரோன் - AP

Published On :

மேற்கு ஜொ்மனியில் உள்ள மெக்கொ்னிச் ராணுவ முகாமின் மீது சந்தேகத்துக்கு இடமான 2 ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு, அந்நாட்டின் முக்கியச் சரக்கு விமான நிலையமான லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிபொருள்களுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உக்ரைனுக்குப் போா்க்கால உதவிகளையும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நேட்டோவின் ராணுவ உபகரணங்களையும் கொண்டு செல்லும் முக்கிய மையமாகவும் இந்த விமான நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் இதுபோன்ற பல சதிச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இக்குற்றச்சாட்டுகளைப் ‘பொய்யான ரஷிய எதிா்ப்புப் பிரச்சாரம்’ என ஜொ்மனியிலுள்ள ரஷிய தூதரகம் மறுத்துள்ளது.

Summary

Drone incursions continue in Germany

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.