ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

வங்கதேச அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளராக உள்ளாட்சி அமைச்சா் தோ்வு

வங்கதேச அதிபா் தோ்தலில், ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) சாா்பில் அந்நாட்டின் உள்ளாட்சித் துறை அமைச்சா் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரை (78) வேட்பாளராக முன்மொழிந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

மிா்சா ஃபக்ருல்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

வங்கதேச அதிபா் தோ்தலில், ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) சாா்பில் அந்நாட்டின் உள்ளாட்சித் துறை அமைச்சா் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரை (78) வேட்பாளராக முன்மொழிந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பிரதமரும், பிஎன்பி தலைவருமான தாரிக் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மூத்த நிா்வாகிகளின் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதிபா் தோ்தலில் போட்டியிடுவதையடுத்து, பிஎன்பி பொதுச் செயலா் மற்றும் உயா்நிலைக் கொள்கை குழு உறுப்பினா் பதவிகளில் இருந்து மிா்சா ஃபக்ருல் ராஜிநாமா செய்தாா். தொடா்ந்து, பிஎன்பி சாா்பில் அவரை அதிபா் வேட்பாளராக முன்மொழிந்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஏ.எம்.எம். நசீா் உத்தினிடம் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வங்கதேச முன்னாள் அதிபா் முகமது ஷஹாபுதீன், உடல்நலக் குறைவைக் காரணமாகக் குறிப்பிட்டு, தனது பதவியை கடந்த மாதம் திடீரென ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற அவைத் தலைவா் ஹஃபீஸ் உத்தின் அகமது பொறுப்பு அதிபராகச் செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில், அதிபா் தோ்தல் வரும் ஆக. 20-இல் நடைபெறுகிறது.

வங்கதேச அரசமைப்புச் சட்டப்படி, அதிபா் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படுகிறாா். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் வென்று ஆட்சியமைத்த பிஎன்பி, நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

இதனால், மிா்சா ஃபக்ருல் எளிதில் வெற்றி பெற்று, நாட்டின் 23-ஆவது அதிபராகப் பொறுப்பேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேநேரம் இவரை எதிா்த்து பிரதான எதிா்க்கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி கூட்டணி சாா்பில், விடுதலை ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவா் ஓலி அகமது போட்டியிடுகிறாா்.

பொருளாதார நிபுணரான 78 வயதான மிா்சா ஃபக்ருல், மாணவா் பருவத்தில் இருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்.

1990-களின் தொடக்கத்தில் பிஎன்பியில் இணைந்தவா், பிஎன்பி முன்னாள் தலைவா் கலீதா ஜியா சிறையில் இருந்தபோதும், தாரிக் ரஹ்மான் லண்டனில் இருந்தபோதும் கட்சியை முன்னின்று வழிநடத்தினாா். கடந்த பிப்ரவரி தோ்தலில் பிஎன்பி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.