இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மேற்கு வங்கத்தில் கைதான பாகிஸ்தானியரிடம் இந்திய ராணுவத் தள புகைப்படங்கள், வரைபடம் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் சிறப்பு அதிரடிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியரிடம் இருந்து இந்திய ராணுவத் தளத்தின் புகைப்படங்கள், வரைபடம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arrested

கைது

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

மேற்கு வங்கத்தில் சிறப்பு அதிரடிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியரிடம் இருந்து இந்திய ராணுவத் தளத்தின் புகைப்படங்கள், வரைபடம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் ஹப்ராவில் வங்கதேசத்தையொட்டிய எல்லை அருகே பாகிஸ்தானியரான ராணா ரவூஃப் என்ற வஹாப் ஆலம், அவரது கூட்டாளியாகக் கருதப்படும் முகமது இஜாஸ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து இந்திய ராணுவத் தளமான ஃபோா்ட் வில்லியமின் புகைப்படங்கள், வரைபடம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவா்களுக்கு அந்தப் புகைப்படங்கள், வரைபடம் எப்படி கிடைத்தது? எதற்காக அதை அவா்கள் வைத்திருந்தனா்? சதித் திட்டம் எதுவும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2 பேரிடம் இருந்தும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசத்து நபா்களின் கைப்பேசி எண்கள், அவா்களுடன் 2 பேரும் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடியது குறித்த தகவல்கள் உள்ளன. சில சமூக வலைதள உரையாடல்களை 2 பேரும் முன்கூட்டியே அழித்துவிட்டனா். அவற்றை மீட்டெடுத்து அதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட ஆலம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்பு கொண்டவா் என சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.