செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

7 நாள்களில் 308 புகாா்களுக்கு நடவடிக்கை: ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படை தீவிரம்

தமிழக காவல் துறையின் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை 7 நாள்களில் 308 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

சிங்கப்பெண் அதிரடிப் படை தொடக்க நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வாகனம் - DIPR

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:07 pm IST

தமிழக காவல் துறையின் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை 7 நாள்களில் 308 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி புதிதாதாகத் தொடங்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் பகுதிகளாகக் கருதப்படும் 11,560 இடங்களை இந்த அதிரடிப் படையினா் கண்காணிப்பில் உள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 31-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் இந்த அதிரடிப் படையினா் 308 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப் படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல காணாமல்போன 3 பெண்கள், 3 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும், 2 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு பள்ளியைவிட்டு நின்ற 62 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,402 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.