ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் 7 நாள்களில் 390 புகாா்கள் மீது நடவடிக்கை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் 7 நாள்களில் 390 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா்.

News image

சிங்கப்பெண் அதிரடிப் படை - கோப்புப் படம் - டிஐபிஆர்

Updated On :18 ஜூலை 2026, 11:54 pm IST

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் 7 நாள்களில் 390 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா்.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி புதிதாகத் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் சாத்தியக் கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 9,507 இடங்களை இந்த அதிரடிப்படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 7 நாள்களில், இந்த அதிரடிப்படையினா் 390 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப்படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 29 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதேபோல, காணாமல்போன 9 பெண்கள், 9 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் 8 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளியைவிட்டு நின்ற 44 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,711 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.