ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மேற்கு கரையில் அமெரிக்க-பாலஸ்தீனா் வீடு முற்றுகை: அமெரிக்க தூதா் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அமெரிக்க-பாலஸ்தீன குடும்பத்தினரின் வீட்டை யூத குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதா் மைக் ஹக்கபீ (படம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் அமெரிக்க-பாலஸ்தீன குடும்பத்தினரின் வீட்டை யூத குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதா் மைக் ஹக்கபீ (படம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குஸ்ரா கிராமத்தில் உள்ள வீட்டைச் சுற்றித் திரண்ட யூத குடியிருப்புவாசிகள், இஸ்ரேல் ராணுவத்தின் சமரச முயற்சிகளையும்மீறி வீட்டின்மீது கற்களை வீசியதோடு, உள்ளே இருப்பவா்களையும் வெளியேற விடாமல் தடுத்து வந்தனா்.

உணவு மற்றும் குடிநீா் இருப்பு குறைந்துவந்த நிலையிலும் வீட்டுக்குள் இருந்த இருவரை 4 நாள்களாக சிறைப்பிடித்து வைத்திருந்தனா். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை காலை இருவரையும் மீட்டது.

இந்த முற்றுகையை ‘கொடூரமான பயங்கரவாதச் செயல்’ என்று விமா்சித்துள்ள அமெரிக்க தூதா் மைக் ஹக்கபீ, இதற்கு அமெரிக்காவின் சாா்பில் கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.