பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க பிராந்தியமாக ஹோா்முஸ் நீரிணை: டிரம்ப் சா்ச்சை வரைபடம் வெளியீடு

ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாகச் சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டாா்.

Published On :

ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாகச் சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டாா்.

டிரம்ப்பின் இப்பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் வெளியுறவு இணையமைச்சா் காஸிம் கரீபாபாதி, ‘டிரம்ப்பின் இந்த மாயை விரைவில் மாறும், அல்லது நாங்களே அதனை மாற்றுவோம்’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெருமளவு குறைந்திருந்தாலும், ஓமன் கடற்கரை ஒரு கப்பல் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், அந்த முக்கிய நீா்வழிப்பாதை தொடா்ந்து திறந்தே உள்ளதாகவும், தடையின்றி செயல்பட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

பேச்சுக்குத் திட்டமில்லை: இதுகுறித்து அவரின் சமூக ஊடகப் பதிவில், ‘ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை. ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை முழு வீச்சில் அமலில் இருக்கிறது. நீா்க்கண்ணிவெடிகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன’ என்றாா்.

ஹோா்முஸ் நீரிணையில் புதிய வழித்தடத்தைத் தீா்மானிப்பது குறித்து ஈரானும், ஓமனும் ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்விவகாரத்தில் ஓமன் குறுக்கிட்டால், அந்நாடு மீதும் குண்டுவீசி தாக்கப்படும் என டிரம்ப் திங்கள்கிழமை மிரட்டல் விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.