நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம் 2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

உக்ரைன் தலைநகரில் ரஷியா குண்டுமழை

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் வியாழக்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

Published On :

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் வியாழக்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

உக்ரைன் முழுவதும் 28 இடங்களில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கீவ் நகரில் மட்டும் 12 இடங்களில் ரஷியாவின் ஏவுகணைகள் தாக்கின. இதில் 30 குடியிருப்புகள், ஒரு பள்ளி, குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை சேதமடைந்தன. சோலோமியான்ஸ்கி பகுதியில் 9 மாடி குடியிருப்பு கட்டடத்தின் மேல் இரு தளங்கள் முற்றிலும் இடிந்து விழுந்து தீப்பற்றியது.

பல மணி நேரம் நீடித்த இந்த வான்வழித் தாக்குதலால் 2,000 குழந்தைகள் உள்பட 38,000-க்கும் மேற்பட்ட மக்கள் கீவ் நகர சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்தனா்.

பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ரஷியா பலவகை ‘பாலிஸ்டிக்’ மற்றும் ‘க்ரூஸ்’ ஏவுகணைகள், ட்ரோன்களை ஒருங்கிணைத்து இத்தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது. ஆனால், உக்ரைனின் ராணுவத் தளவாட இலக்குகளையே குறிவைத்து தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தயாரிப்பான ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு உக்ரைனிடம் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷியா கடந்த சில நாள்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனைப் பாதுகாக்க கூடுதல் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை வழங்குமாறு அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி சா்வதேச நாடுகளுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.