தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

அமெரிக்கா உடனான போரில் ஈரான் வென்றதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது: ஈரான் அதிபர்

அமெரிக்கா உடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் - AP

Published On :

அமெரிக்கா உடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் செய்தியாளர்களுடன் பேசியதாக ஈரான் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. அதில், “அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, இந்தப் போர் முடிவுக்கு வரவேண்டும். உலக நாடுகள் எங்களின் வெற்றியை அங்கீகரித்துள்ளனர். அதேநேரம், அமெரிக்கா அனைவராலும் வெறுக்கப்படுகிறது” என்று அவர் பேசியிருந்தார்.

ஈரானுக்கு எதிராக பொருளாதார ரீதியான தாக்குதலை நடத்துவதற்கான முன்னெடுப்பில் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருதல், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது போன்ற கோரிக்கைகளுக்கு ஈரானை அடிபணிய வைக்கும் நோக்கில், ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார தாக்குதல் மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், போர் தொடங்கப்பட்டது முதல் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து மாற்று வழிகளில் எரிபொருள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து பிரான்ஸும் சவுதி அரேபியாவும் விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

The Iranian President has stated that the world has acknowledged Iran's victory in the war with the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.