மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ஆபரேஷன் சிந்தூரில் தகர்க்கப்பட்ட ‘ஜெய்ஷ்-இ-முகமது’ தலைமையகத்தை சீரமைக்க பாகிஸ்தான் நிதியுதவி!

ஆபரேஷன் சிந்தூரில் தகர்க்கப்பட்ட ‘ஜெய்ஷ் இ முகமது’ தலைமையகத்தை சீரமைக்க பாகிஸ்தான் நிதியுதவி வழங்கியுள்ளதைப் பற்றி...

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மார்க்கஸ் சுபான் அல்லாஹ் தலைமையகம்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 9:41 pm IST

இந்திய ஆயுதப்படைகள் நடத்திய சிந்தூர் நடவடிக்கையில் தகர்க்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தைப் புனரமைக்க பாகிஸ்தான் அரசு நிதியுதவி வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்றும், கட்டமைப்புகளைத் தகர்க்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது.

பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், பதிலடியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு வாரங்கள் கழித்து மே 7 நள்ளிரவில், இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து நடத்திய அதிதுல்லிய தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 9 முக்கிய முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்த அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இந்திய ராணுவத் தாக்குதலில் தரைமட்டம் ஆக்கப்பட்டு, முற்றிலும் தகர்க்கப்பட்ட பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மார்க்கஸ் சுபான் அல்லாஹ் தலைமையகத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டு 15 மாதங்களான நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள மார்க்கஸ் சுபான் அல்லாஹ் முகாமில் பளிங்குக் கற்கள் கொண்டு சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் பூசப்பட்டு, புதியதாக குவிமாடமும் கட்டப்பட்டுள்ளன.

ஜெய்ஷ்-இ-முகமது மார்க்கஸ் சுபான் அல்லாஹ் முகாம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பாகிஸ்தான் அரசு, 25 கோடி பாகிஸ்தான் ரூபாயை வழங்கியிருக்கிறது. இதில், சுமார் 11 கோடி ரூபாய் மைய மண்டப கட்டுமானத்துக்கு செலவிடப்பட்டதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The reconstruction of Jaish-e-Mohammed's (JeM) Markaz Subhan Allah headquarters in Pakistan's Bahawalpur, damaged in India's Operation Sindoor strikes last May

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.