ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

நியூயார்க்: பீட்சா டெலிவரி செய்யும்போது பஞ்சாப் இளைஞர் சுட்டுக்கொலை!

நியூயார்க்கில் பஞ்சாப் இளைஞர் மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி....

Punjab Man, 28, Shot Dead While Delivering Pizza In New York

கோப்புப்படம்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 3:21 pm IST

நியூயார்க்கில் பீட்சா டெலிவரி செய்யும்போது பஞ்சாப் இளைஞர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பிகோவால் கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (28). நியூயார்க்கில் உள்ள இவர் சம்பவத்தன்று பீட்சா டெலிவரி செய்யச் சென்றிருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அவரது கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் கொள்ளை முயற்சியின் காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நியூயார்க் நகர உள்ளூர் காவல்துறை வழக்கை விசாரித்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும். குர்தீப் சிங்கிற்கு தந்தையும் ஒரு சகோதரரும் உள்ளனர். அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை விரைவாகக் கைது செய்து கடுமையான தண்டனையை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். குர்தீப் சிங், 13 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி அமெரிக்கா சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A tragic incident has come to light involving the death of a young man from Punjab in the US. Gurdeep Singh, 28, was shot dead by an unidentified shooter while he was out delivering pizza in New York City.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.