எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பாதுகாப்புப் படை வீரர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக வீரர் ஒருவர் சுட்டதில் 4 வீரர்கள் பலியாகினர்.

சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) வீரர்கள் - கோப்புப் படம்

Published On :

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) முகாம் ஒன்றில், சக வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உதவி கமாண்டன்ட் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 4 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிமாசலப் பிரதேச எல்லைக்கு அருகே உள்ள மஷ்கா கிராமத்தில் அமைந்துள்ள 'சேவா-III' நீர்மின் திட்ட வளாகத்தில் இன்று (செப். 29) காலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தலைமை காவலர் (கான்ஸ்டபிள்) அபிதேஷ் குமார் என்பவர், சக ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் சக ஊழியர்கள் அவரைப் பிடித்து, அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வீரர்கள் உதவி கமாண்டன்ட் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லக்ஷ்மன் சிங் மற்றும் காவலர்கள் ரஃபிக் அகமது, சந்தீப் குமார் என 4 பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சிஐஎஸ்எஃப் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, தலைமைக் காவலர் அதேவேளையில், காவல்துறையினர் இது தொடர்பாக, அபிதேஷ் குமார் மீது வழக்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதனால் வாக்குவாதம் ஏற்பட்டது? அதைத் தொடர்ந்து, நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கான சூழல் மற்றும் நோக்கம் என்னவென்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Four shot dead following an altercation among security force personnel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.