
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படை வாகனம் கவிழ்ந்ததில் 5 வீரர்கள் காயம்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகன விபத்துக்குள்ளானது பற்றி...

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை. - கோப்புப்படம்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகன விபத்துக்குள்ளானத்தில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் சனிக்கிழமை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஐந்து வீரர்கள் காயமடைந்ததாகக் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்முவை நோக்கிச் சென்ற பாதுகாப்புப் படையினரின் வாகனத் தொடரணியில் இந்த வாகனமும் இடம்பெற்றிருந்தது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சம்பா-செரி பகுதி அருகே இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, காயமடைந்த உதவி ஆய்வாளர் கர் சிங், ஓட்டுநர் ஷமீம் அகமது, காவலர்கள் சுனில் குமார், பர்ஷ்தும் குமார் மற்றும் சந்தன் யாதவ் ஆகிய வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் இந்த விபத்தில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.
Summary
At least five Border Security Force (BSF) personnel were injured after a vehicle carrying them turned turtle in Ramban district of Jammu and Kashmir on Saturday, police officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








