
ம.பி.: நர்மதை நதியில் ஊர்க்காவல் படை வீரர்கள் சென்ற படகு மூழ்கியதால் பரபரப்பு!
மத்திய பிரதேசத்தின் நர்மதை நதியில் ஊர்க்காவல் படை வீரர்கள் சென்ற படகு மூழ்கியது பற்றி...

நர்மதை நதி.
மத்திய பிரதேசத்தின் நர்மதை நதியில் ஊர்க்காவல் படை வீரர்கள் சென்ற படகு திடீரென மூழ்கியதால் பரபரப்பு நிலவியது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில், பார்கி அணையின் மதகுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நர்மதை நதியில் வெள்ளிக்கிழமை மோட்டார் படகில் ஊர்க்காவல் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மிதந்து வந்த மரக்கட்டை ஒன்று படகின் என்ஜினில் சிக்கியதால் என்ஜின் பழுதானது.
இதையடுத்து அந்த படகு மூழ்கியது. நதியின் வலுவான நீரோட்டத்தில் மோட்டார் படகு மூழ்கத் தொடங்கியதும், அதில் இருந்த வீரர்கள் பீதியடைந்தனர். சிலர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மற்றவர்களை உள்ளூர் படகோட்டிகள் விரைந்து மீட்டனர். மோட்டார் படகில் வழக்கத்திற்கு மாறாக அதிகம்பேர் பயணித்ததாக வெளியான தகவலை காவல் ஆய்வாளர் பாகேல் மறுத்தார்.
மேலும், அனைத்து வீரர்களும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததாகவும் அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து போலீஸாரும் ஊர்க்காவல் படை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜபல்பூரின் பார்கி பகுதியில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் பலியான சில மாதங்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A boat carrying nine Home Guard personnel sank in the Narmada River in Madhya Pradesh's Jabalpur district after the engine snagged on floating debris, triggering panic before all personnel were rescued safely, police said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






