தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தில்லியில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை! ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்!

தில்லியில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

Delhi

தில்லியில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை - ANI

Published On :3 செப்டம்பர் 2026, 11:36 am IST

தில்லியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வியாழக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹரியாணாவின் சோனிபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் தாஹியா என்பவர், தில்லியில் நரேலா பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வழக்கம் போல் இன்று காலை வந்துள்ளார்.

பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவரை, இரு சக்கர வாகனத்தின் வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.

இதுதொடர்பாக தில்லி காவல்துறை கூறுகையில், ”இந்த கொலை சம்பவம் காலை 7.15 மணியளவில் நடந்துள்ளது. முதல்கட்டத் தகவலின்படி, இருவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கொல்லப்பட்டவரை குறிவைத்து 16 முறை சுட்டுள்ளனர். கொல்லப்பட்டவரின் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகின்றன” என்றனர்.

கடந்த 8 நாள்களில் நடைபெறும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன், இதேபோன்றுதான் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியே வந்த அங்கித் பாலியானை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

உ.பி. காவல்துறையின் விசாரணையில் கொலை சம்பவத்தை நிகழ்த்தியது கோகி கும்பல் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே, ஆகஸ்ட் 31 ஆம் தேதி, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மீதமுள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கித் பாலியன் கொலைக்கும் இன்று தில்லியில் நடைபெற்ற கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

Summary

Man shot dead in broad daylight in Delhi! Second such incident in just a week!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.