16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தில்லியில் மீண்டும் ஒருவர் சுட்டுக்கொலை! ஒரே மாதத்தில் ஜிம் வாயிலில் 3-வது சம்பவம்!

தில்லியில் மீண்டும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி...

தில்லியில் மீண்டும் ஒருவர் சுட்டுக்கொலை - மாதிரிப் படம்

Published On :

தில்லியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே திங்கள்கிழமை காலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெற்கு தில்லியில் உள்ள அயா நகர் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருப்பவர் இன்று காலை 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடற்பயிற்சி கூடத்தின் வாசலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் 12 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலைக்கான காரணங்கள், கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மூன்றாவது சம்பவம்

கடந்த ஒரு மாதத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே மூன்றாவது முறையாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன், இதேபோன்றுதான் சுட்டுக் கொல்லப்பட்டார். உ.பி. காவல்துறையின் விசாரணையில் கொலை சம்பவத்தை நிகழ்த்தியது கோகி கும்பல் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

தொடர்ந்து, செப்டம்பர் 3 ஆம் தேதி, தில்லியில் நரேலா பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே ரியல் எஸ்டேட் அதிபர் பிரமோத் தாஹியா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரே மாதத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே நடைபெற்ற மூன்று கொலைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Summary

Another person shot dead in Delhi! Third such incident at a gym entrance in just one month!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.