புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

அஸ்ஸாம்: ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மருத்துவர் திடீர் பலி!

அஸ்ஸாமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மருத்துவர் பலியாகியிருப்பது பற்றி....

Assam doctor dies while exercising in gym

கோப்புப்படம்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:57 pm IST

அஸ்ஸாமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மருத்துவர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம், நாகோன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஷாஹின் அகமது(50). இவர் அங்குள்ள உள்ளூர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்து பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நகரத்தின் திமோருகூரி பகுதியில் உள்ள ஜிம்மில் நடந்துள்ளது. ஜிம்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், ஷாஹின் அகமது உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுவது தெரியவந்துள்ளது. ஜிம்மில் இருந்தவர்கள் உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.

இருப்பினும், மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அந்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். முதற்கட்ட பரிசோதனையில் மாரடைப்பே இறப்புக்கான காரணம் எனத் தெரிவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

குவஹாத்தியைச் சேர்ந்த அகமது, சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A doctor of Assam's Nagaon Medical College and Hospital collapsed and died while exercising at a local gym, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.