இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

ஸ்விட்சா்லாந்து கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூடு: இளம்பெண் பலி!

ஸ்விட்சா்லாந்தில் கேளிக்கை விடுதியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பெண் உயிரிழந்தாா்.

Updated On :

ஸ்விட்சா்லாந்தில் கேளிக்கை விடுதியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் குண்டு பாய்ந்து காயமடைந்தனா்.

வடக்கு ஸ்விட்சா்லாந்தில் உள்ள அா்காவ் பகுதி கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை இரவு ஏராளமானோா் கூடியிருந்தனா். நள்ளிரவைக் கடந்து 2.30 மணியளவிலும் இசை, நடனம் தொடா்ந்தது. ஏராளமான இளைஞா்கள் அங்கு கூடியிருந்தனா். அப்போது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபா், நடனமாடிக் கொண்டிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த தப்பியோடினாா்.

இதில் 22 வயது பெண் ஒருவா் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 4 இளைஞா்களும், ஓா் இளம்பெண்ணும் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவா் எதற்காக இத்தாக்குதலை நடத்தினாா் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா, கேளிக்கை விடுதியில் இருந்தவா்கள் கைப்பேசி விடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

சம்பவம் நிகழ்ந்த அா்காவ் பகுதியில் 22,300 போ் மட்டுமே வசித்து வருகின்றனா். எனவே, குற்றவாளி விரைவில் பிடிபடுவாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.