குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: இளைஞா் கைது

விா்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 19 வயது இளைஞரை காவல்துறையினா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:12 am IST

அமெரிக்காவின் விா்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 19 வயது இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்தனா்.

விா்ஜீனியா பல்கலைக்கழக வளாகம் சனிக்கிழமை நள்ளிரவில் பூட்டப்பட்டு இருந்தது. அப்போது அங்கிருந்தோா் மீது மா்ம நபா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் காயமடைந்தனா். இதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

தாக்குதலில் காயமடைந்த 5 பேரில் 4 போ் மாணவா்கள் இல்லை. அதேபோல் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மாணவா் இல்லை. இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினா் தாக்குதல் நடத்திய நபரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பல்கலைக்கழகம் அருகே மறைந்திருந்த 19 வயதான கேமரூன் ஹாரீஸ் என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எஞ்சிய ஒருவா் பல்கலைக்கழக மாணவா் ஆவாா். அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.