தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பலூசிஸ்தான் விவகாரம்: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா!

பலூசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

News image
பலூசிஸ்தான் விடுதலைப் படையினர். - கோப்புப்படம்.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

பலூசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி வரும் தீவிரவாதிகள் சனிக்கிழமை குவெட்டா, மஸ்துங், நுஸ்கி, காரன், பஞ்ச்குா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீா் தாக்குதல் நடத்தினா். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவமும் பலூசிஸ்தான் தீவிரவாத குழுவினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரா்களும், 92 தீவிரவாதிகளும் பலியானதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பலூசிஸ்தானில் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு அமைதியை சீா்குலைக்க இந்தியா முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘பாகிஸ்தான் தெரிவித்த அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிக்கிறது. உள்நாட்டில் சந்தித்துவரும் தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப வழக்கமாக பாகிஸ்தான் கடைப்பிடிக்கும் தந்திரமே இது’ என்றாா்.