ரஷியாவுடனான போரில் சுமார் 55,000 உக்ரைன் வீரர்கள் பலியானதாக வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி, சுமார் 4 ஆண்டுகளான நிலையில், இந்தப் போரில் 55,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில், இரு தரப்பிலும் சுமார் 5 லட்சம் பேர் பலியானதாகவும், சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
2025 பிப்ரவரி மாதத்தில் சுமார் 46,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பலியானதாக ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.
இருப்பினும், இந்தப் போரில் ரஷியாவின் தரப்பில் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் தரப்பில் 1.4 லட்சம் பேரும் பலியாகியிருக்கலாம் என்று சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கை கூறுகிறது.
Summary
Ukraine's president Zelenskyy says 55,000 troops killed so far
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு
பதவியேற்ற ஓராண்டுக்குள் உக்ரைன் பிரதமர் ராஜிநாமா!








