கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரஷியா - உக்ரைன் போருக்கு ஜூன் காலக்கெடு: அமெரிக்கா

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு ஜூன் மாதம்வரையில் அமெரிக்கா காலக்கெடு: ஸெலென்ஸ்கி

News image
ஸெலென்ஸ்கி | டிரம்ப் | புதின்- சித்திரிப்பு
Updated On :7 பிப்ரவரி 2026, 9:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு அமெரிக்கா காலக்கெடு வழங்கியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு வழங்கியதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும், ஜூன் மாதத்துக்குள் முடிவெடுக்கப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் தரும் என்றும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, இரு நாட்டு போர் நிறுத்தப் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, போரை நிறுத்தும் முயற்சியாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வரியும் விதித்தார்.

இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்திருந்த நிலையில், தற்போது ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்றுகூறி, வரியை 18 சதவிகிதமாகக் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.