எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

News image

வாட்ஸ்ஆப்

Updated On :12 பிப்ரவரி 2026, 3:44 pm IST

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது.

ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு எடுத்திருக்கும் மிக முக்கிய நடவடிக்கையால் கிட்டத்தட்ட 100 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், இன்று ரஷிய அரசு, அந்நாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலிலும் வாட்ஸ்ஆப்பை நீக்கியிருக்கிறது. அந்நாட்டு மக்கள் உள்நாட்டுத் தயாரிப்பு செயலிகளைப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் ரஷிய மக்களின் பாதுகாப்பில் குறைபாடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

பயனர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்க அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டெலிகிராம் நிறுவனம் தெரிவிக்கையில் இது ஒரு நாட்டு அரசின் நடவடிக்கை, நிறுவனத்தின் கொள்கைகளுக்குள் இது வரவில்லை. எங்கள் நிறுவனத்தின் கொள்கை மக்களின் சுதந்திரம், தனியுரிமை. இதில் அழுத்தத்துக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதலின்போது, வெளிநாட்டு தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கும், ரஷிய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, ரஷிய அரசு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயலிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மேக்ஸ் என்ற செயலி உருவாக்கப்பட்டது. ஆனால், இது மக்களை கண்காணிக்க உருவாக்கப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பயனர்களின் சாட் தகவல்கள், தனியுரிமை பாதுகாப்புக்குரியது என்று வாட்ஸ்ஆப் கூறி வருகிறது. அந்த தகவல்களை உளவு பார்க்க, ரஷிய அரசிடம் தர வாட்ஸ்ஆப் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, மக்களை கண்காணிக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ் செயலியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.

Summary

100 million people are suffering due to the removal of WhatsApp in Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.