பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஏஐ உச்சி மாநாடு! இந்தியப் பயணத்தை நிறைவு செய்தார் ஸ்பெயின் அதிபர்!

ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸின் இந்தியப் பயணம் குறித்து...

ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் (கோப்புப் படம்) - AP

Published On :

தில்லியில் நடைபெறும் செய்யறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் தனது இந்தியப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தில்லியில் நடைபெறும் செய்யறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க, மத்திய அரசின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், பூடான், பிரேசில், கஜகஸ்தான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கடந்த புதன்கிழமை (பிப். 18) இந்தியா வந்தடைந்தார்.

இந்தப் பயணத்தில், அவருடன் ஸ்பெயின் அரசின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் குடிமை சேவை அமைச்சர் ஆஸ்கார் லோபஸ் மற்றும் வேளாண்மை, மீன்வளம் மற்றும் உணவுத் துறை அமைச்சர் லூயிஸ் பிளானாஸ் புச்சாட்ஸ் ஆகியோரும் வருகை தந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அதிபர் சான்செஸை நேரில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செய்யறிவு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்பெயின் அதிபர் சான்செஸ் இன்று (பிப். 19) தனது இந்தியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு ஸ்பெயின் புறப்பட்டுள்ளார்.

மேலும், தாயகம் திரும்பும் அதிபர் சான்செஸை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி நேரில் சென்று வழியனுப்பியுள்ளார்.

Summary

Spanish President Pedro Sanchez has concluded his visit to India after attending the AI Impact Summit in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.