புதின் இல்லத் தாக்குதல்: ஆதாரங்களை
அமெரிக்காவிடம் அளித்தது ரஷியா

புதின் இல்லத் தாக்குதல்: ஆதாரங்களை அமெரிக்காவிடம் அளித்தது ரஷியா

தங்கள் அதிபா் விளாதிமீா் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த ஆதாரங்களை ரஷியா அமெரிக்காவிடம் அளித்துள்ளது.
Published on

தங்கள் அதிபா் விளாதிமீா் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த ஆதாரங்களை ரஷியா அமெரிக்காவிடம் அளித்துள்ளது.

இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மரியா ஜகரோவா கூறியதாவது:

வால்டை ஏரி அருகே உள்ள புதினின் இல்லத்தை உக்ரைன் 91 ட்ரோன்களால் தாக்கி அழிக்க முயன்றது. அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கியுள்ளோம். இந்தத் தாக்குதல் முயற்சி உக்ரைன் உளவுப் பிரிவால் திட்டமிடப்பட்டது.

அமெரிக்கா இதை உறுதிப்படுத்தும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

டிசம்பா் 28-29 இரவில் நடந்ததாக ரஷியா கூறும் இந்தத் தாக்குதலுக்கு சேதமடைந்த ட்ரோன் ஒன்றின் (படம்) விடியோவையும், ட்ரோன்கள் உக்ரைனின் சுமி, சொ்னிஹிவ் பகுதிகளில் இருந்து வந்ததாகக் கூறும் வரைபடத்தையும் ஆதாரமாக வழங்கியுள்ளது.

ஆனால் உக்ரைன் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளது. ‘ரஷியா எந்த நம்பகமான ஆதாரத்தையும் வழங்கவில்லை. இது போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைகளைத் தடுக்கும் முயற்சி‘ என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் அந்த்ரி சிபிஹா கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com